முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றினார். முதல் போட்டியில் சுந்தர் 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்ததுடன், ஒரு ஓவரில் 19 ரன்களையும் வாரி வழங்கினார். அவருக்குப் பதிலாக ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய்க்கு இந்தியா வாய்ப்பு வழங்கலாம். முதல் போட்டியில் நான்கு ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து ஏமாற்றிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் இரண்டாவது போட்டியில் இடம் இருக்காது எனத் தெரிகிறது.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக, ஐபிஎல்-லில் கலக்கிய பிரின்ஸ் யாதவ் நாளை அறிமுக வீரராகக் களமிறங்கலாம். அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி அல்லது சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யான்ஷ் ஷெட்ஜ், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.