அதன்படி இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஹர்ஷ் துபே, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் இட்ம்பெற்றுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்த்தால் இடதுகை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை கில் நடுவரிசையிலும் சாய் சுதர்சன் ஒப்பனிங் இறங்கவும் வாய்ப்புள்ளது.
அனுபவமிக்க கே.எல். ராகுல் 3-வது அல்லது 4-வது வரிசையிலும், தேவ்தத் படிக்கல் அடுத்த வரிசையிலும் களம் காண்பார்கள். நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியின் முதன்மை கீப்பராகச் செயல்படுவார். சண்டிகர் மைதானத்தின் பிட்ச் தன்மையைப் பொறுத்து இந்தியா 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.