ஐபிஎல் 2026 தொடரில் கோப்பை வென்று ஆர்சிபி அணி சாதனை படைத்தது. குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை தட்டித்தூக்கி சாதனை படைத்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி பாஸ்ட் பவுலர்களின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. பின்பு ஆடிய ஆர்சிபி 18 ஓவரில் 5 விக்கெட் இழந்து வெற்றி இழக்கை எட்டியது. சேஸ் மாஸ்டர் விராட் கோலி 42 ப்ந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் பேருந்தில் தீ
இந்த நிலையில் ஐபிஎல் ஃபைனலில் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று இரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டி முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பும்போது, வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் பயணித்த பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.