இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

Published : Dec 01, 2025, 10:23 PM IST

Hardik Pandya Returns to India T20 Squad: காயத்தில் இருந்த குணமடைந்த இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
ஹர்திக் பாண்ட்யா கம்பேக்

இந்தியா அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. ஹர்திக் பாண்ட்யா தனது உடற்தகுதியை சோதிப்பதற்காக, டிசம்பர் 2-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) தனது உள்ளூர் அணியான பரோடாவுக்காக முதலில் விளையாட உள்ளார்.

24
தசைப்பிடிப்பு காயம்

பிசிசிஐ வட்டாரங்களின்படி, பாண்ட்யா அதில் விளையாடுவதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து அனுமதி பெற்றுள்ளார். பிசிசிஐ விரைவில் டி20 தொடருக்கான அணியை அறிவிக்க உள்ள நிலையில், தேர்வாளர்கள் SMAT-ல் பாண்டியாவின் உடற்தகுதி மற்றும் செயல்திறனை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

உடற்தகுதி

ஹர்திக் பாண்ட்யா கடைசியாக ஆசியக் கோப்பையில், செப்டம்பர் 26 அன்று இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். இடது தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக அதன்பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 

அவர் தனது மறுவாழ்வுப் பயிற்சியை அக்டோபர் 15 அன்று பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்கினார். நவம்பர் 29 வரை தனது உடற்பயிற்சி முறையை மீண்டும் தொடர்ந்தார்.

34
உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் இடம்

பரோடா அணிக்காக ஹர்திக் பாண்ட்யா விளையாடும்போது அவரின் உடற்தகுதியை பொறுத்து டி20 அணியில் இடம் பிடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டி20 போட்டிகளில் இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவரான விளங்கி வரும் ஹர்திக் பாண்டட்யா, 120 ஆட்டங்களில் 27.35 சராசரி மற்றும் 141.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1860 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஐந்து அரை சதங்களும் அடங்கும்.

44
சூப்பர் ஆல்ரவுண்டர்

பந்துவீச்சிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு, 108 இன்னிங்ஸ்களில் 98 விக்கெட்டுகளை 26.58 சராசரியில் வீழ்த்தியுள்ளார். இதில் மூன்று முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா (99 விக்கெட்கள்) மற்றும் அர்ஷ்தீப் சிங் (105) ஆகியோருக்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா (98) என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories