விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எடுத்டஹ் முடிவு ஒரே இரவில் எடுத்தது அல்ல. அதனை நாம் மதிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதேபோல் ரோகித் சர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இருவரும் ஓய்வு அறிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தன.
24
மீண்டும் கம்பேக் கொடுக்க ரசிகர்கள் கோரிக்கை
இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் விராட் கோலி அதிரடி சதம் (120 பந்துகளில் 135 ரன்கள்) அடித்து அசத்தியுள்ளார். தனது இளமைக்காலம் போல் அவர் சூப்பராக ஆடியதால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். பிசிசிஐ அவருடன் பேச வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இந்திய முன்னாள் வீரர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி ஓய்வு ஒரே இரவில் எடுத்த முடிவில்லை என்றும் அவரது ஓய்வு முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
34
ஒரே இரவில் எடுக்கப்படும் முடிவு அல்ல
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலான "Ash Ki baat"-ல் பேசிய அஸ்வின், ''டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலியின் முடிவு நன்கு ஆலோசித்து, திட்டமிட்டு எடுக்கப்பட்டது. ஓய்வு என்பது ஒருபோதும் திடீரென ஒரே இரவில் எடுக்கப்படும் முடிவு அல்ல.
விராட் போன்ற ஒரு திறமையான வீரர் இத்தகைய முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பு அனைத்து காரணிகளையும் கவனமாகப் பரிசீலித்திருப்பார். யாரும் திடீர் உணர்ச்சியில் செயல்படுவதில்லை. நாம் அனைவரும் அந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், ''ரசிகர்களாகிய நாம் அனைவரும் விராட் கோலி விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம், அந்த ஆசை முற்றிலும் இயல்பானது. முதல் ஓடிஐயில் அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்த ரசிகர்கள், 'விராட் தனது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார் - ஏன் அவரை நாம் அதிகம் பார்க்க முடியவில்லை?' என்று உணரலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு சவால். அதில் அவர் தனது முடிவை எடுத்துவிட்டார்.
அந்த முடிவு திட்டமிட்டது. அது மதிக்கப்பட வேண்டும். அணி மாற்றுக் கட்டத்தில் இருக்கும்போது இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வருவது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஓடிஐயில் விராட் மற்றும் ரோகித் பேட்டிங் செய்வதை நம்மால் முடிந்தவரை கொண்டாடுவோம்'' என்று கூறியுள்ளார்.