ரோகித், கோலியை ஓரம் கட்டும் கம்பீர்..! டென்ஷன் ஆன பிசிசிஐ..! கம்பீர், அகார்கருடன் அவசர மீட்டிங்!

Published : Dec 01, 2025, 06:46 PM IST

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோகித், விராட் கோலியை ஓரம் கட்டி வரும் நிலையில், கம்பீர், அகார்கரை பிசிசிஐ அவசர கூட்டத்துக்கு அழைத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி

சொந்த மண்ணில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் இந்தியா சொந்த மண்ணில் படுமோசமாக விளையாடி வருவதால் அவர் பதவி விலக கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓடிஐயில் விராட் கோலி சதமும், ரோகித் சர்மா அரை சதமும் விளாசினார்கள்.

24
கம்பீர் ரோகித்-கோலி இடையே விரிசல்

இதனால் இவர்கள் இருவரும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வர வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கவுதம் கம்பீர் பதவியேற்றது முதலே ரோகித், கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களை ஓரம்கட்டி வந்தார். 

கம்பீரின் கடும் அழுத்தம் காரணமாகவே ரோகித், கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓய்வுபெற்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இப்போது ஓடிஐ அணியிலும் ரோகித், கோலி இருப்பதை கம்பீர் விரும்பவில்லை என்றும் இவர்கள் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டதாகவும் செய்திகள் பரவின.

34
பிசிசிஐ அவசர கூட்டம்

இந்த நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 3ம் தேதி (புதன்கிழை) நடைபெறும் நிலையில், அதற்கு முன்பாக பிசிசிஐ ஒரு அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, இணைச் செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

44
கம்பீர் செயல்பாட்டால் பிசிசிஐ அதிருப்தி

கோலி, ரோகித் உள்ளிட்ட மூத்த வீரர்களை கம்பீர் கையாளும் முறை பிசிசிஐக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இந்த கூட்டத்தில் பிசிசிஐ அதிகாரிகள் கம்பீர் மற்றும் அகர்கரிடம் கேள்வி எழுப்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் சொந்த மண்ணில் தொடர் தோல்விகள், அணியின் தேர்வு முறை, எதிர்கால திட்டமிடல் ஆகியவை குறித்தும் கம்பீர், அகார்கருடன் பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு மூத்த வீரர்களிடம் அணுகுமுறையில் பெரும் மாற்றம் உண்டாகும் என தகவல்கள் கூறுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories