ரோகித் அதிரடி! விராட் கோலி ருத்ரதாண்டவம்! தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா!

Published : Nov 30, 2025, 05:33 PM ISTUpdated : Nov 30, 2025, 06:29 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓடிஐயில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 349 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி சூப்பர் சதம் விளாசினார்.

PREV
14
இந்திய அணி ரன்கள் குவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது. அட்டகாசமாக விளையாடிய விராட் கோலி ஓடிஐ கிரிக்கெட்டில் தனது 52வது சதம் (135 ரன்கள்) விளாசினார். 

ரோகித் சர்மா (57 ரன்), கே.எல்.ராகுல் (60 ரன்) அரை சதம் அடித்தனர். ஜடேஜா 20 பந்தில் 32 ரன் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியில் யான்சன், பர்கர், போஷ், பார்ட்மன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

24
ரோகித், கோலி அசத்தல்

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (18) நந்த்ரே பர்கரின் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ரோகித்தும் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். 

எட்டாவது ஓவரில் போஷின் பந்துவீச்சில் ரோஹித் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அதில் ஒன்று அவரது டிரேட்மார்க் புல் ஷாட் ஆகும். அடுத்த ஓவரில், கோலி ஓட்నీல் பார்ட்மேனின் பந்துவீச்சில் மற்றொரு சிக்ஸரை விளாசினார்.

34
வாஷிங்டன், ருத்ராஜ் ஏமாற்றம்

இந்த ஜோடி தங்களது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை வெறும் 82 பந்துகளில் எட்டியது. போஷின் பந்துவீச்சில் கோலி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி 48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனை தொடர்ந்து ரோகித்தும் அரை சதம் கடந்தார். ரோகித் சர்மா 51 பந்துகளில் 57 ரன்களில் (ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள்) யான்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 

மீண்டும் அணிக்குத் திரும்பிய ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில், டிவால்ட் ப்ரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரும் (13) விரைவில் வெளியேறினார்.

44
ஜடேஜா, கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டம்

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தூண் போல் நின்ற விராட் கோலி ஓடிஐயில் தனது 52வது சதம் விளாசினார். கோலி தொடர்ந்து சூப்பராக விளையாடி 11 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 120 பந்தில் 135 ரன்கள் அடித்து அசத்தினார். 

கேப்டன் கே.எல்.ராகுல் 60 ரன்களும், கடைசி கட்டத்தில் ஜடேஜா 20 பந்தில் 32 ரன் விளாசி அணி 340 ரன்களை கடக்க வைத்தனர். இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. இப்போது சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories