தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஷாகித் அப்ரிடியின் உலக சாதனையை முறியடித்தார். அதாவது இன்றைய போட்டியில் அதிரடியில் பட்டையை கிளப்பிய ரோகித் சர்மா 51 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் அடித்து யான்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
24
அதிக சிக்சர் அடித்த முதல் சர்வதேச வீரர்
இந்த போட்டியில் 3 சிக்சர்கள் நொறுக்கியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 352 சிக்சர்கள் விளசியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்கள் விளாசி இருந்த நிலையில், ரோகித் சர்மா அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இதன்பின்பு கிறிஸ் கெய்ல் 351 சிக்சர்களையும், சனத் ஜெயசூர்யா 270 சிக்சர்களையும், மகேந்திர சிங் தோனி 229 சிக்சர்களையும் விளாசியுள்ளனர்.
34
அதிரடியில் வெளுத்துக்கட்டிய ரோ-கோ
முன்னதாக ராஞ்சியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதைத் தொடர்ந்து, இந்தியா யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (18) விக்கெட்டை இழந்தது. நந்த்ரே பர்கரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் அவர் கேட்ச் ஆனார். பின்பு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ரோகித்தும் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள்.
ரோகித் தனது டிரேட் மார்க் ஷாட்களை விளையாட, விராட் கோலி சூப்பரான சிக்சர்களை அடித்து நொறுக்கினார். அட்டகாசமான அரை சதம் விளாசினார். இதன்பிறகு ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட் ஆனார். இருவரும் ஜோடியாக 100 ரன்களுக்கு மேல் கடந்தனர்.
இதன்பின்பு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன் மட்டுமே எடுத்து பார்ட்மேன் பந்தில் டெவால்ட் பிராவிஸின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார்.
சதத்தை நெருங்கிய கோலி
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றத்துடன் 13 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார். இப்போது வரை இந்திய அணி 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி சதத்தை நெருங்கினார்.