ஐபிஎல்லில் இருந்து 'சிக்சர் மன்னன்' ஆண்ட்ரே ரஸல் ஓய்வு..! ரசிகர்கள் ஷாக்..! இதுதான் காரணம்!

Published : Nov 30, 2025, 01:29 PM IST

Andre Russell Quits IPL: கொல்கத்தா நைட் ரைடஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
ஐபிஎல்லில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வு

ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் (Andre Russell) ஓய்வுபெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சுமார் 12 ஆண்டு காலம் விளையாடிய ஆண்ட்ரே ரஸல் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

24
மற்ற லீக்குகளில் விளையாடுவார்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரே ரஸல், ''ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால் உலகம் முழுவதும் உள்ள மற்ற எல்லா லீக்குகளிலும் நான் தொடர்ந்து விளையாடுவேன். ஐபிஎல்லில் ஒரு அருமையான பயணம். 12 சீசன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குடும்பத்திடம் இருந்து நிறைய அன்பு என இனிமையான நினைவுகள்.

KKR அணியில் புதிய பொறுப்பு

ஆனால் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு நான் எங்கும் செல்லவில்லை. 2026ன் பவர் கோச் ஆக KKR சப்போர்ட் ஸ்டாப் ஆக ஒரு புதிய பொறுப்பில் நீங்கள் என்னை பார்ப்பீர்கள். புதிய அத்தியாயம். அதே எனர்ஜி. என்றென்றும் KKR'' என்று தெரிவித்துள்ளார்.

34
கொல்கத்தா அணியின் மேட்ச் வின்னர்

2012ம் ஆண்டு ஐபிஎல்லில் காலடி பதித்த ஆண்ட்ரே ரஸல், 2012 மற்றும் 2013ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்பு 2014ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

அன்றில் இருந்து இப்போது வரை சுமார் 12 ஆண்டுகள் KKR அணிக்காக விளையாடியுள்ள ஆண்ட்ரே ரஸல் அசலாட்டாக சிக்சர்களை விளாசித் தள்ளும் தனது திறமையின் மூலமும், பவுலிங் மற்றும் சூப்பர் பீல்டிங்கின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது மட்டுமின்றி தனியொருவனாக கொல்கத்தா அணிக்கு பலமுறை வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

44
KKR பேட்டிங் பயிற்சியாளராகிறாரா?

ஆண்ட்ரே ரஸல் கொல்கத்தா அணிக்காக 133 போட்டிகளில் விளையாடி 2593 ரன்கள் விளாசியுள்ளார். 122 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 174.8 ஆகும். கொல்கத்தா அணியில் புதிய பொறுப்பு ஏற்க உள்ளதாக ஆண்ட்ரே ரஸல் கூறியுள்ளதன் மூலம் அவர் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories