தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி 52வது சதம் விளாசி அசத்தியுள்ளார். ஓடிஐயில் இத்தனை சதங்கள் நொறுக்கிய ஒரே வீரர் இவர் தான்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி தனது 52வது சதம் விளாசி அசத்தியுள்ளார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய விராட் கோலி தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினார். 99 ரன்களில் இருந்தபோது யான்சன் பந்தில் பவுண்டரி அடித்து ஓடிஐயில் தன்னுடைய 52வது சதத்தை விராட் கோலி அடித்தார்.
23
52வது சதம் அடித்த கோலி
சதம் அடித்தவுடன் கோலி அதனை துள்ளிக்குதித்து கொண்டாடினார். ஓடிஐயில் 52வது சதம் விளாசிய ஒரே வீரர் விராட் கோலி தான். சச்சின் டெண்டுல்கர் ஓடிஐயில் 49 சதம் அடித்திருந்தார். விராட் கோலி 294 இன்னிங்ஸ்களில் 52 சதம் அடித்துள்ளார். கோலி சதம் அடித்த பிறகு ரசிகர் ஒருவர் உள்ளே ஓடி வந்து அவரது காலில் விழுந்தார். மைதான பாதுகாப்பு ஊழியர்கள் உடனே அவரை வெளியேற்றினார்கள்.
33
சிக்சர் மழை பொழிந்த கிரிக்கெட்டின் கிங்
சதம் அடித்த பிறகும் விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அட்டகாசமாக விளையாடிய அவர் 120 பந்தில் 135 ரன்கள் அடித்து பர்கர் பந்தில் கேட்ச் ஆனார். கோலி 11 பவுண்டரிகளையும், 7 சிக்சர்களையும் விளாசியுள்ளார். இப்போது வரை இந்திய அணி 43 ஓவரில் 5 விக்கெட் இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது.