IPL 2023: அந்த பையன் அப்படியே தோனி மாதிரி.. இந்திய அணியில் கண்டிப்பா ஆடவைக்கணும்..! ஹர்பஜன் சிங் அதிரடி

First Published | Apr 17, 2023, 8:05 PM IST

சஞ்சு சாம்சன் தோனியை போன்ற வீரர்; அவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
 

சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதுதான் அவரது பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் தான் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
 

ஐபிஎல்லில் 148 போட்டிகளில் ஆடி 3683 ரன்களை குவித்துள்ள சஞ்சு சாம்சன், 11 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் ஆடி முறையே 330 மற்றும் 301 ரன்கள் அடித்துள்ளார். கிடைத்த வாய்ப்புகளில் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது விமர்சனத்துக்குள்ளாகிறது. 

IPL 2023: மன்னிப்புலாம் கேட்காதடா தம்பி.. நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! இந்திய வீரரை உசுப்பிவிட்ட பாண்டிங்

Tap to resize

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்டகாலமாக ஆடிவரும் சஞ்சு சாம்சன், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார் சஞ்சு சாம்சன். ஃபைனலில் குஜராத்திடம் தோற்று கோப்பையை இழந்தது. 

இந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 178 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 55 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். 32 பந்தில் 60 ரன்கள் அடித்து, ஒரு கேப்டனாக பொறுப்புடன் ஆடி வெற்றிக்கு உதவினார். கேப்டன்சியிலும் மிகவும் நிதானமாக செயல்பட்டு அனைவரையும் கவர்கிறார்.

IPL 2023:சுனில் நரைனின் 12ஆண்டுகால ஐபிஎல் கெரியரில் மோசமான ஸ்பெல்! நரைனை நார் நாராய் கிழித்த மும்பை இந்தியன்ஸ்

இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சஞ்சு சாம்சன் ஒரு கேப்டனாக மீண்டும் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடியுள்ளார். நான் ஏற்கனவேவும் சொல்லியிருக்கிறேன்.. இப்போதும் சொல்கிறேன்.. இந்திய அணியில் சஞ்சு சாம்சனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஸ்பின்னர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்கள் இருவரையுமே சிறப்பாக ஆடுகிறார். அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்த வீரர் சாம்சன். தோனியை போலவே சாம்சனும் அவரது திறமை மீது நம்பிக்கை கொண்ட வீரர் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

Latest Videos

click me!