ரிங்கு சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வரிசையாக 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
ரிங்கு சிங்
இந்த சீசனில் ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரிங்கு சிங் படைத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநில அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு சிங். இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்துள்ளார்.
ரிங்கு சிங்
தந்தையோ சிலிண்டர் டெலிவரி செய்பவர். ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுபவர். மற்றொரு சகோதரர் பயிற்சி கூடத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடுபவர். இவ்வளவு ஏன், ரிங்கு சிங் கூட துப்புரவு தொழில் செய்து வந்திருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு கஷ்டமான ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
ரிங்கு சிங்
கிரிக்கெட் விளையாட்டை கனவாக கொண்டவர். எப்போது கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்துள்ளது. அவரது ஆசைக்கு கிடைத்த பரிசு தான், ஐபிஎல் அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றார்.
ரிங்கு சிங்
கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரூ.80 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் வருமானத்தின் மூலமாக தனது குடும்பத்திற்கு அழகான வீட்டை கட்டினார். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குடும்ப சூழல் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
ரிங்கு சிங்
கடந்த 2022 ஆம் ஆண்டு சீசன் மூலமாக திரும்ப வந்தார். அப்போது ரூ.55 லட்சத்திற்கு தான் அவர் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனிலும் ரூ.55 லட்சத்திற்கு தான் அவர் அணியில் இடம் பெற்றிருக்கிறார். 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 425 ரன்கள் அடித்துள்ளார். இதில், 32 பவுண்டரிகள், 22 சிக்ஸர்கள் அடங்கும். ஒரு போட்டியில் 58 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார்.
ரிங்கு சிங்
இந்த நிலையில், இனி தன்னைப் போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வறுமையில் வாடும் இளம் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் ஹாஸ்டல் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.
ரிங்கு சிங்
உத்திரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன் தனக்கு பயிற்சி அளித்த மசூதுஷ் ஜாஃபர் அமினி, அலிகர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார். அவரது அகாடமிக்காக 15 ஏக்கர் பரப்பரளவில் ரூ.50 லட்சத்தில் ஹாஸ்டல் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதனுடைய திறப்பு விழா அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
ரிங்கு சிங்
ரு.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் 14 அறைகள் உள்ளன. அப்படி உள்ள ஒவ்வொரு அறையிலும் 4 வீரர்கள் தங்குவதற்கு உண்டான வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. வறுமையில் வாடும் கிரிக்கெட் வீரர்களுக்காக ரிங்கு சிங் இந்த ஹாஸ்டலை கட்டிக் கொடுத்துள்ளார்.
ரிங்கு சிங்
அதுமட்டுமின்றி கேண்டீனில் உணவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரிங்கு சிங் கூறியிருப்பதாவது: தனக்கு வாழ்வளித்த விளையாட்டிற்காக திரும்பி கொடுக்கும் வகையில் இதனை செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.