ஐபிஎல்லில் அபாரமாக ஆடி வெற்றிகரமாக திகழும் வீரர்களில் சுனில் நரைனும் ஒருவர். 2012ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை கேகேஆர் அணிக்காக ஆடிவரும் சுனில் நரைன், 11 சீசன்களாக தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திவருகிறார். 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கேகேஆர் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.
நடந்துவரும் ஐபிஎல் 16வதுசீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 3 ஓவரில் 41 ரன்களை வாரி வழங்கினார். இதில் ஒரு ஓவரில் 22 ரன்களை வழங்கினார். இதுதான் ஐபிஎல் கெரியரில் அவர் ஒரு ஓவரில் வழங்கிய அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த போட்டியில் அவரது எகானமி ரேட் 13.70 ஆகும். இதுதான் ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச எகானமி ரேட் ஆகும்.