ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுவருகின்றன.
25
முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மேலேறி வருகிறது. தலா 4 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இன்று மோதுகின்றன. கடைசி போட்டியில் தோற்ற சிஎஸ்கே அணி தோல்வியிலிருந்து மீண்டெழும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
35
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.