சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 23 ஆவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், ஆர்ஆர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
சஞ்சு சாம்சன்
அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் 45 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28 ரன்களும், டேவிட் மில்லர் 46 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 177 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன்
பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வால் 1 ரன்னிலும், ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதுவரையில் கடந்த 7 ஆண்டுகளில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆனது கிடையாது.
சஞ்சு சாம்சன்
முதல் முறையாக அவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். 84 போட்டிகளில் முதல் முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே அவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன்
இவர்களைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாக நின்று ரன்கள் சேர்த்தனர். ரன் ரேட் உயர உயர, இருவரும் அதிரடி காட்டினர். தேவ்தத் படிக்கல் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன்
சாம்சன் 29 ரன்கள் எடுத்திருந்த போது ரஷீத் கான் வீசிய 13 ஆவது ஓவரில் 12.2ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். அதன் பிறகு 3 மற்றும் 4ஆவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.
சஞ்சு சாம்சன்
இதையடுத்து சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து அவர் 10 ரன்கள் கூடுதலாக சேர்த்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன்
இப்படி ரஷீத் கானின் ஒரே ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் விளாசிய 2ஆவது வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அவர் ரஷீத் கானின் 2.2ஆவது ஓவரில் சிக்சரில், 3ஆவது பந்தில் சிக்ஸர், 4ஆவது பந்தில் சிக்ஸர், 5ஆவது பந்தில் சிக்ஸர் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையரின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகளில் 4ல் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
சஞ்சு சாம்சன்
வரும் 19 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் பலம் வாய்ந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணி 5 போட்டிகளில் 3ல் வெற்றி கண்டு 2ஆவது இடத்தில் உள்ளது.