IPL 2023: பெங்களூரு கோட்டையில் முத்திரை பதிக்குமா தோனி படை? புதிய பிளான் போடும் விராட் கோலி!

First Published | Apr 17, 2023, 10:27 AM IST

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி இன்று இரவு 7.3 மணிக்கு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

சிஎஸ்கே - ஆர்சிபி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

சிஎஸ்கே - ஆர்சிபி

இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 30 போட்டிகளில் 19 போட்டியில் சென்னை அணியும், 10 போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.


சிஎஸ்கே - ஆர்சிபி

கடைசியாக நடந்த 6 போட்டிகளில் சிஎஸ்கே 4 போட்டியிலும், ஆர்சிபி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணியும் சம பலத்துடன் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாகவே இருக்கிறது.

சிஎஸ்கே - ஆர்சிபி

தோனி படையில் ரகானே, ருத்துராஜ் கெய்க்வாட், ஷிவப் துபே, கான்வே, ஜடேஜா, ராயுடு என்ற மாஸ் நட்சத்திரங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே, மொயீன் அலி, ஜடேஜா ஆகியோரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிஎஸ்கே - ஆர்சிபி

இதே போன்று ஆர்சிபி அணியில் பேட்டிங்கை பொறுத்த வரையில் விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல், லோம்ரர் ஆகியோரும், பவுலிங்கில் ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜயகுமார் வைஷாக் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 

சிஎஸ்கே - ஆர்சிபி

பெங்களூருவில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதே பலத்துடன் இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. ஆனால், சென்னை அணியைப் பொறுத்த வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியின் போது 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சிஎஸ்கே - ஆர்சிபி

இதுவரையில் நடந்த போட்டிகளை வைத்து பார்க்கும் போது பெங்களூரு - டெல்லி போட்டியைத் தவிர ஹோம் மைதானங்களில் எதிர் அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிஎஸ்கே - ஆர்சிபி

அதிக முறை ஜடேஜா பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்த நிலையில், இனிமேலும் அப்படி நடக்காமல் இருப்பதற்கு விராட் கோலியும் சரி, மேக்ஸ்வெல்லும் சரி புதிய பிளானோடு இந்தப் போட்டியில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!