ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில், 3வது போட்டியில் வெற்றி பெற்றது. வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்று கேகேஆரை எதிர்கொண்டு ஆடிவருகிறது. கேகேஆர் நிர்ணயித்த 186 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டிவருகிறது.
கேகேஆர் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்தமான அணி. கேகேஆருக்கு எதிராக பொதுவாக அபாரமாக ஆடி ஸ்கோர் செய்வது ரோஹித்தின் வழக்கம். கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். முதல் இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்தார். ரோஹித் 2வது இன்னிங்ஸில் வெறும் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். ஆனால் 20 ரன்கள் மட்டுமே அடித்து பெரிய அளவில் இம்பேக்ட் கொடுக்காமல் சென்றார். ஆனாலும் அந்த 20 ரன்னில் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
IPL 2023: வலுவான் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இன்று அடித்த 20 ரன்னுடன் சேர்த்து ஐபிஎல்லில் கேகேஆருக்கு எதிராக 1040 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதன்மூலம் ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஷிகர் தவான் சிஎஸ்கேவிற்கு எதிராக 1029 ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த நிலையில், கேகேஆருக்கு எதிராக 1040 ரன்கள் அடித்து தவான் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா.