IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தொடர் தோல்விகள்..! ரிக்கி பாண்டிங்கை சீண்டிய சேவாக்

First Published | Apr 16, 2023, 4:22 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை தழுவிய நிலையில், வெற்றிகளுக்கான கிரெடிட்டை ஏற்றுக்கொள்ளும் பயிற்சியாளர் தான் தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், ஆர்சிபி அணிகளும் நன்றாக ஆடிவருகின்றன. முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 3வது போட்டியில் வெற்றியை பெற்றது. ஆனால் ஆடிய 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவி இந்த சீசனில் படுமோசமாக சொதப்பிவருவது டெல்லி கேபிடள்ஸ் தான்.

IPL 2023: ஐபிஎல்லில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம்.! MI vs KKR டாஸ் ரிப்போர்ட்.. ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர் 
 

Tap to resize

ஆடிய 5 போட்டிகளிலும் தோற்று முதல் வெற்றியைக்கூட பெறமுடியாமல் டெல்லி கேபிடள்ஸ் அணி திணறிவரும் நிலையில், வெற்றிகளுக்கான கிரெடிட்டைஏற்றுக்கொள்ளும் பயிற்சியாளர் தான் தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், ஐபிஎல்லில் ஒரு அணி ஜெயித்தால் பயிற்சியாளருக்கு கிரெடிட் கொடுக்கப்படுகிறது. எனவே தோற்றாலும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டும். பாண்டிங்கை பலமுறை பாராட்டியிருக்கிறோம். டெல்லி கேபிடள்ஸை ஃபைனலுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அவர் பயிற்சியாளரான பின் டெல்லி அணி தொடர்ந்து பிளே ஆஃபிற்கு முன்னேறியிருக்கிறது. அவற்றிற்கான கிரெடிட்டை ஏற்றுக்கொண்டால், இப்போது தொடர் தோல்விகளுக்கான பொறுப்பையும் பயிற்சியாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

IPL 2023: வலுவான் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
 

Image credit: Delhi Capitals

ஐபிஎல்லில் பயிற்சி செய்வது இந்திய அணியை பயிற்சி செய்வது போல அல்ல. ஐபிஎல் அணியை பயிற்சி செய்யும்போது எந்த ரோலுமே இருக்காது. அணி வீரர்களை நிர்வகித்தால் மட்டுமே போதுமானது. வீரர்களுக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிப்பது மட்டுமே பயிற்சியாளரின் பணி. ஆனால் ஐபிஎல்லில் ஒரு அணி ஜெயிக்கும்போது பயிற்சியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.கிரெடிட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். டெல்லி இப்போது சொதப்பிவருகிறது. தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos

click me!