ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
24
இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. 2 அண்களுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.