IPL 2023: ஐபிஎல்லில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம்.! MI vs KKR டாஸ் ரிப்போர்ட்.. ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர்

First Published | Apr 16, 2023, 3:28 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 
 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 3வது போட்டியில் ஜெயித்த நிலையில்  வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.  வெற்றி தோல்விய கலந்து பெற்றுவரும் கேகேஆர் அணியும் வெற்றி முனைப்பில் களமிறங்குகிறது.
 

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் கேகேஆருக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா வயிற்று வலியால் ஆடவில்லை. அதனால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்கிறார். ரோஹித் சர்மா இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2வது இன்னிங்ஸில் தேவைப்பட்டால் பேட்டிங் ஆடுவார்.

Tap to resize

முபை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல்லில் அறிமுகமாகிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் கடந்த சில ஆண்டுகளாக அங்கம் வகிக்கும் நிலையில், இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஜுன் டெண்டுல்கரின் சேவை மும்பை அணிக்குத் தேவை என்பதால் அவர் இந்த போட்டியில் அறிமுகமாகிறார்.
 

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), டிம் டேவிட், நெஹல் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, டுயான் யான்சன், ரைலீ மெரிடித்.
 

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், நிதிஷ் ராணா (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி. 
 

Latest Videos

click me!