IPL 2023: பெங்களூருவில் சாதனைக்கு கிங் தோனி; அதிக ரன்கள் எடுத்தவர்களில் நம்பர் ஒன் இடம்!

Published : Apr 17, 2023, 11:29 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களில் தோனி முதலிடத்தில் இருக்கிறார். அதே போன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தோனியின் சராசரி 92.6ஆக உள்ளது. 

PREV
17
IPL 2023: பெங்களூருவில் சாதனைக்கு கிங் தோனி; அதிக ரன்கள் எடுத்தவர்களில் நம்பர் ஒன் இடம்!
எம் எஸ் தோனி

ஐபிஎல் 2023 கிரிக்கெட்டில் முக்கியமான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 

27
எம் எஸ் தோனி

இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த 16ஆவது சீசனில் இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளீல், 2 போட்டிகளில் சிஎஸ்கே அணியும், 2 போட்டிகளில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன.

37
எம் எஸ் தோனி

இதுவரையில் பெங்களூரு மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரிசிபி அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அதில், விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

47
எம் எஸ் தோனி

இன்றைய போட்டியில் அவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான பெங்களூருவில் நடந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி த்ரில்லர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

57
எம் எஸ் தோனி

இதுவரையில் சின்னசாமி மைதானங்களில் நடந்த 10 போட்டிகளில் சிஎஸ்கே கேப்டன் தோனி 5 அரைசதங்கள் உள்பட 463 ரன்கள் எடுத்துள்ளார். 

67
எம் எஸ் தோனி

பெங்களூரு அணிக்கு எதிராக 30 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 838 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஆர்சிபி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

77
எம் எஸ் தோனி

அதே போன்று இன்றைய போட்டியில் தோனியின் அதிரடி ஆட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய 4 போட்டிகளில் தோனி 14 (நாட் அவுட்), 12, 32 (நாட் அவுட்) என்று ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories