IPL 2023: மும்பை போட்டியில் வீரர்களுக்கு இடையில் வாக்குவாதம்: சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணாவிற்கு அபராதம்!

First Published | Apr 17, 2023, 1:35 PM IST

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் வீரர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதம் காரணமாக ஐபிஎல் விதிமீறலின் படி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன் வாக்குவாதம்

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார்.

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன் வாக்குவாதம்

இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Tap to resize

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன் வாக்குவாதம்

அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் மற்றம் நிதிஷ் ராணா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில், நிதிஷ் ராணாவை ரித்திக் ஷோகீன் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது நிதிஷ் ராணாவைப் பார்த்து ஷோகீன் ஏதோ சொல்ல, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பியூஷ் சாவ்லா இருவரும் சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பி வைத்தனர். 

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன் வாக்குவாதம்

அதன் பிறகு கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது அதிரடி ஆட்டத்தால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கேகேஆருக்காக சதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 9 சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன் வாக்குவாதம்

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மா களமிறங்கினார். அவர், 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இஷான் கிஷான் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன் வாக்குவாதம்

கடைசியாக வந்த டிம் டேவிட் 20 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியாக 17.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்த ஐபிஎல் தொடரில் தனது 2ஆவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

நிதிஷ் ராணா - ரித்திக் ஷோகீன்

இந்த நிலையில், தான் ஐபிஎல் விதிமீறலில் ஈடுபட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவிகிதமும், ரித்திக் ஷோகீனுக்கு 10 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ்விற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!