விராட் கோலி
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.
விராட் கோலி
இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 30 போட்டிகளில் 19 போட்டியில் சென்னை அணியும், 10 போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக நடந்த 6 போட்டிகளில் சிஎஸ்கே 4 போட்டியிலும், ஆர்சிபி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலி
இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளில், 2 போட்டிகளில் சிஎஸ்கே அணியும், 2 போட்டிகளில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியும் சம பலத்துடன் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாகவே இருக்கிறது.
விராட் கோலி
இதுவரையில் பெங்களூரு மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரிசிபி அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அதில், விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இன்றைய போட்டியில் அவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான பெங்களூருவில் நடந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி த்ரில்லர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி
இந்த 16ஆவது சீசனில் இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளில், 2 போட்டிகளில் சிஎஸ்கே அணியும், 2 போட்டிகளில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன.
விராட் கோலி
இதுவரையில் பெங்களூரு மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரிசிபி அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அதில், விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
விராட் கோலி
இதுவரையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 29 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள விராட் கோலி 9 அரைசதங்கள் உள்பட 979 ரன்கள் எடுத்துள்ளார். 30ஆவது இன்னிங்ஸாக இன்று விளையாடும் போட்டியில் அவர் 21 ரன்கள் சேர்த்தால் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
விராட் கோலி
இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷிகர் தவான் மட்டுமே 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.