பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

First Published Jan 7, 2023, 3:09 PM IST

வலைப்பயிற்சியில் நோ பால்களை வீசி பழக்கப்பட்டதன் விளைவுதான், இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 5 நோ பால்கள் உட்பட மொத்தம் 7 நோ பால்களை இந்திய அணி வீச காரணம் என்று கௌதம் கம்பீர் கடுமையாக விளாசியுள்ளார்.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில்,நேற்று புனேவில் நடந்த 2வது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது. தசுன் ஷனாகா 22 பந்தில் 56 ரன்களை குவித்து சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது இலங்கை அணி.
 

207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 57 ரன்களுக்கே இஷான் கிஷன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் சூர்யகுமாரும் அக்ஸர் படேலும் இணைந்து அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 6வது விக்கெட்டுக்கு 42 பந்தில் 90 ரன்களை குவித்தனர். 51 ரன்னில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, 31 பந்தில் 65 ரன்களை குவித்து கடைசி வரை போராடிய அக்ஸர் படேல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 190 ரன்கள் அடித்த இந்திய அணி, கடுமையாக போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஜெய் ஷா மீது பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் குற்றச்சாட்டு! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
 

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய 5 நோ-பால்கள் தான் இரு அணிகளுக்கு இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக 3 நோ பால்களை வீசி, டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் நோ பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 2வது ஓவரின் கடைசி பந்தை வீச 3 நோ பால் வீசி அந்த ஒரு பந்தில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதன்பின்னர் அவருக்கு பவுலிங் கொடுக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா, 19வது ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் 2 நோ பால்களை வீசி, 2 ஓவரில் 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கினார் அர்ஷ்தீப். இந்த இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமாக 7 நோ பால்களை வழங்கியது. இந்திய அணி 16 ரன் வித்தியாசத்தில் தான் தோற்றது. அர்ஷ்தீப் அந்த 5 நோ பால்கள் வீசவில்லை என்றால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
 

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய நோ பால் குறித்து பேசிய கௌதம் கம்பீர், 7 நோ பால்கள் வீசியிருக்கின்றனர்... நினைத்து பாருங்கள்.. அந்த நோ பால்களுடன் சேர்த்து 21 ஓவர்களுக்கு மேல் இந்திய அணி வீசியுள்ளது. எப்பேர்ப்பட்ட பவுலரும் தவறான பந்து வீசுவார். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனும் தவறான ஷாட்டுகளை ஆடுவார். ஆனால் இதுமாதிரியான தவறுகள் ரிதத்தை பொறுத்தது. அந்த வீரர் ரிதத்திலேயே இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. காயத்திலிருந்து வரும் வீரர் நேரடியாக சர்வதேச போட்டியில் ஆடமுடியாது. உள்நாட்டு போட்டிகளில் ஆடி 15-20 ஓவர்களை வீசிய பின் தான் சர்வதேச போட்டிகளில் ஆட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீரர் ரிதத்திற்கு வரமுடியும். அதுதான் சரியான நடைமுறையாக இருக்க முடியும்.

IND vs SL: தம்பி நீ பண்ண வரைக்கும் போதும்.. கொஞ்சம் உட்காரு..! 3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

Image credit: Getty

பவுலர்கள் சில நேரங்களில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சில பந்துகளை வீசுவார்கள். ஆனால் 7 நோ பால்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. வலைப்பயிற்சியிலும் நோ பால்கள் வீசி பழக்கப்பட்டதால் தான் போட்டியிலும் அவர் நோ பால்களை தொடர்ந்து வீசுகிறார். எனவே பயிற்சியின்போது இந்த தவறை எல்லாம் தவிர்க்க வேண்டும். பவுலிங் பயிற்சியாளர் இதை கவனித்து சரி செய்ய வேண்டும். 7 நோ பால்களுக்கு ஃபீல்டிங் செட் செய்வது கேப்டனுக்கு கடினம். அந்த 7 நோ பால்களில் 30 ரன்கள் எதிரணிக்கு கிடைத்திருக்கும். அது மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது என்று கம்பீர் விமர்சித்துள்ளார்.
 

click me!