இந்திய அணி வீரர்கள் குடும்பத்தினருடன் செல்வதற்கு தடை விதித்தது குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
Gautam Gambhir Explains Ban On Indian Players' Families
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
25
குடும்பத்தினருடன் செல்ல பிசிசிஐ தடை
இங்கிலாந்து தொடருக்காக சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்கள் குடும்பத்தினருடன் செல்ல பிசிசிஐ தடை விதித்து இருந்தது.
35
கோலி, ரோகித் ஓய்வுக்கு இதுதான் காரணமா?
ஒரு மூத்த இந்திய வீரர் தனது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிசிசிஐயை அணுகினார். ஆனால் அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ இந்த கட்டுப்பாடுகள் விதித்ததால் தான் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டுக்கு முன்னதாக சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பேசிய கௌதம் கம்பீர், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இந்திய வீரர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்திய வீரர்கள் விடுமுறைக்காக செல்லவில்லை. மாறாக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை கவுதம் கம்பீர் நினைவூட்டினார். இது தொடர்பாக பேசிய அவர், “குடும்பங்கள் முக்கியம், ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு ஒரு நோக்கத்திற்காக இருக்கிறீர்கள். இது விடுமுறை அல்ல. நீங்கள் இங்கு ஒரு பெரிய நோக்கத்திற்காக இருக்கிறீர்கள்” என்று புஜாராவிடம் அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
55
குடும்பத்துக்கு எதிரானவன் நான் இல்லை
“இந்த டிரஸ்ஸிங் ரூமில் அல்லது இந்த சுற்றுப்பயணத்தில் நாட்டைப் பெருமைப்படுத்தும் வாய்ப்பைப் பெறுபவர்கள் மிகக் குறைவு. எனவே ஆம், குடும்பங்கள் எங்களுடன் இல்லாததற்கு நான் எதிரானவன் அல்ல,” என்று கவுதம் கம்பீர் மேலும் கூறினார்.