ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-2021ல் நடந்த முதல் சீசனில் நியூசிலாந்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2021-2023ம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துவருகின்றன. வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை வலுவாக பிடித்தது. 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 68.52 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும் அது அந்த அணியின் வெற்றி விகிதம் 64 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்பதால், இன்னும் 2 அணிகள் அதைவிட கூடுதல் வெற்றி விகிதத்தை பெறுவது இனிமேல் சாத்தியமில்லை என்பதால், ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.
”தாராவி தெருக்கள் டூ WPL” வறுமையுடன் கனவை துரத்தி சாதித்த சிம்ரன் ஷேக்..! சாதிக்க துடிப்பவர்களுக்கான உத்வேகம்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 60.29 சதவிகிதங்களுடன் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் 64 என்ற வெற்றி விகிதத்துடன் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். ஆனால் ஒருவேளை இந்திய அணி தோல்வியை தழுவினாலோ அல்லது ஆட்டம் டிராவானாலோ, இலங்கைக்கும் ஃபைனலுக்கான வாய்ப்பிருப்பதால், அனைத்து சாத்தியங்களையும் ஆராய்வோம்.
1. இந்திய அணி ஜெயித்தால்....
இந்திய அணி அகமதாபாத்தில் நடக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் ஜெயித்துவிட்டால் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். வேறு எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என ஒயிட்வாஷ் செய்தால் கூட அது இந்திய அணியை பாதிக்காது.
3. இந்தியாவிற்கான பின்புற வாய்ப்பு
இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும், இலங்கை அணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யவில்லை என்றால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறலாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 53.33 சதவிகிதத்துடன் 3ம் இடத்தில் இருக்கும் இலங்கை அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தால் 60 சதவிகிதத்துடன் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். ஆனால் இலங்கை ஒரு போட்டியில் ஜெயித்து ஒரு போட்டியில் தோற்பது அந்த அணியின் சதவிகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. கிட்டத்தட்ட 52-53 என்ற விகிதத்திலேயே இருக்கும். அதனால் கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும், இந்திய அணியின் விகிதம் 56 அளவில் இருக்கும் என்பதால் இந்தியா ஃபைனலுக்கு முன்னேறலாம்.