இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றதால் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.
இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளது. ஏற்கனவே பும்ரா காயத்தால் அவதிப்பட்டுவருவதால் முகமது ஷமியின் ஃபிட்னெஸ் மிக முக்கியம். ஐபிஎல்லும் வரும் 31ம் தேதி தொடங்குவதால் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் ஃபிட்னெஸ் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து, ஃபாஸ்ட் பவுலர்களுக்கு தேவையான ஓய்வளித்துவருகிறது. அந்தவகையில் தான் ஷமி 3வது டெஸ்ட்டில் ஓய்வு கொடுக்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டார். இந்திய அணி அந்த டெஸ்ட்டில் தோற்றதால் கடைசி டெஸ்ட்டில் ஷமியை அணிக்குள் கொண்டுவருகிறது இந்திய அணி நிர்வாகம்.