இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். ஸ்மித் சிறப்பாக கேப்டன்சி செய்தார். பவுலிங் சுழற்சி, பவுலர்களை பயன்படுத்திய விதம், ஃபீல்டிங் செட்டப், வியூகங்கள், டி.ஆர்.எஸ் என அனைத்து வகையிலும் ஒரு கேப்டனாக சாமர்த்தியமாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் குவித்தார் ஸ்மித்.
ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்
இந்நிலையில், அகமதாபாத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் பாட் கம்மின்ஸ் ஆடமாட்டார் என்பதால், கடைசி டெஸ்ட்டிலும் ஸ்மித்தே கேப்டன்சி செய்வார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஸ்மார்ட்டான கேப்டனான ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியும் அதைவிட ஸ்மார்ட்டாக செயல்பட்டாக வேண்டும்.