எங்கேயோ போன வெற்றியை கையோடு கூட்டி வந்த கிரேஸ் ஹாரிஸ்: யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

Published : Mar 05, 2023, 11:19 PM ISTUpdated : Mar 05, 2023, 11:34 PM IST

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுபி வாரியர்ஸ் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

PREV
116
எங்கேயோ போன வெற்றியை கையோடு கூட்டி வந்த கிரேஸ் ஹாரிஸ்: யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், யுபி வாரியர்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்டஸ் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
 

216
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

நேற்றைய போட்டியின் போது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் போட்டியில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். 

316
குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

சபினேனி மேகனா, ஷோபியா டங்கலி, சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட், தயாலன் ஹேமலதா, ஸ்னே ராணா, தனுஜா கன்வர், கிம் ஹெர்த், மான்சி ஜோஷி
 

416
யுபி வாரியர்ஸ் மகளிர் அணி:

அலீசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), டலியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹரீஸ், சிம்ரன் ஷேக், கிரன் நவ்கிரே, தேவிகா வைத்யா, ஷோபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி ஹயக்வாட்
 

516
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக, இந்திய வீராங்கனையான ஸ்னே ராணா கேப்டனாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி கிம் ஹெர்த், ஷோபியா டங்கலி, சுஷ்மா வெர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

616
கிம் கர்த் 5 விக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியது.

716
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

தொடக்க வீராங்கனையாக மேகனா, டங்கலி ஆகியோர் களமிறங்கினர். இதில், டங்கலி 13 ரன்கள் எடுத்து தீப்தி சர்மா ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் எடுத்து கடையில் ஆட்டமிழந்தார். 

816
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

அதன் பிறகு வந்த வீராங்கனைகள் ஓரளவு ரன்கள் எடுக்க குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்துள்ளது. அஸ்லேக் ஹார்ட்னர் மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் கடைசி கட்டத்தில் ரன் சேர்க்க குஜராத் டீசண்டான ஸ்கோரை எட்டியது.

916
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

யுபி வாரியர்ஸ் தரப்பில் பந்து வீச்சில் தீப்தி சர்மா மற்றும் ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அஞ்சலி சர்வானி மற்றும் டலியா மெக்ராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

1016
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

வெற்றியை எட்டக் கூடிய இலக்கை நோக்கி யுபி வாரியர்ஸ் மகளிர் அணி களமிறங்கியது. இதில், அலைசா ஹீலி, ஸ்வேதா செராவத் ஆகியோர் களமிறங்கினர். எனினும், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

1116
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

இவர்களைத் தொடர்ந் து வந்த கிரன் நாவிக்ரே நின்னு நிதானமாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 53 ரன்கள் சேர்த்து ஆடடமிழந்தார். தக்லியா மெக்ராத் டக் அவுட்டில் வெளியேறினார்.

1216
கிரேஸ் ஹாரிஸ்

அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற யுபி வாரியர்ஸ் அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிரேஸ் ஹாரிஸ் மற்றும் எக்லிஸ்டோன் இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசினர் ரன்கள் குவித்தனர்.

1316
குஜராத் ஜெயிண்ட்ஸ்

ஒரு கட்டத்தில் வைடுக்கு இரு அணி வீரர்களும் மாறி மாறி ரெவியூ எடுத்தனர். எனினும், 2 வைடுமே யுபி வாரியர்ஸூக்கு சாதமாக அமைந்தது. இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிரேஸ் ஹாரிஸ் முதல் பந்தில் 6, 2ஆவது பந்தில் 2 ரன்னும், 3ஆவது பந்தில் பவுண்டரியும், 4 ஆவது பந்திலும் பவுண்டரியும், 5ஆவது பந்தில் சிக்சர் விளாச யுபி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் 175 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

1416
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

கிரேஸ் ஹாரிஸ் 26 பந்துகளில் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதே போன்று ஷோபி எக்லிஸ்டோன் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

1516
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

பந்து வீச்சில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வீராங்கனை கிம் கர்த் 5 விக்கெட் கைப்பற்றினார். அன்னபெல் மற்றும் மான்சி ஜோஷி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

1616
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ்

இந்த தோல்வியின் மூலமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் 2ஆவது தோல்வியை தழுவியுள்ளது. மும்பை இந் தியன்ஸ் அணி முதலிடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 2ஆவது இடத்திலும் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories