IPL, WPL-ல் வைடு, நோ பால்களை ரிவியூ செய்யலாம்.! மிகப்பெரிய விதி மாற்றம் அறிமுகம்.! தீர்க்கதரிசி சஞ்சு சாம்சன்

First Published | Mar 6, 2023, 3:09 PM IST

நடப்பு மகளிர் பீரிமியர் லீக் தொடரில் கள நடுவர்களின் வைடு மற்றும் நோ பால் முடிவுகளை ரிவியூ செய்யும் விதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விதி ஐபிஎல்லுக்கும் பொருந்தும். ஐபிஎல்லிலும் இனிமேல் வைடி, நோ பால்களை ரிவியூ செய்யலாம்.
 

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இயற்கையின் நியதி. அது கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். கிரிக்கெட்டில் காலத்திற்கேற்ப விதிகளும் அப்டேட் செய்யப்படுகின்றன. கள நடுவர்களின் முடிவுகளை ரிவியூ செய்யும் டி.ஆர்.எஸ் விதி கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது.

அவுட் - நாட் அவுட் என்ற கள நடுவர்களின் முடிவுகளை மட்டுமே இதுவரை ரிவியூ செய்ய முடியுமாறு இருந்தது. இந்நிலையில், ஐபிஎல், மகளிர் பிரீமியர் லீக் ஆகிய டி20 லீக் தொடர்களில் இப்போது புதிய விதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கள நடுவர்களின் வைடு, நோ பால் முடிவுகளையும் ரிவியூ செய்யலாம் என்ற விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

IND vs AUS: கம்மின்ஸ் வரல.. கடைசி டெஸ்ட்டிலும் ஆஸி., அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தான் கேப்டன்..! பீதியில் இந்தியா


ஐபிஎல்லில் ரோஹித், சஞ்சு சாம்சன் ஆகிய கேப்டன்கள் கள நடுவர்களின் வைடு, நோ பால் முடிவுகளால் அதிருப்தியடைந்து கிண்டலாக ரிவியூ செய்த சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. சில நேரங்களில் டெத் ஓவர்களில் இதுமாதிரியான, அம்பயர்களின் சில சர்ச்சை முடிவுகளால் ஆட்டத்தின் முடிவே மாறி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுக்கும் வகையில், இந்த விதி ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 

இந்த விதியை முதல் முறையாக பயன்படுத்தி ரிவியூ செய்த வீராங்கனை என்ற பெருமையை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெற்றுள்ளார். மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவரும் ஜெமிமா, ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மேகான் ஸ்கட் கடைசி ஓவரில் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ரிவியூ செய்தார். ஆனால் அது நோ பால் இல்லை என்று டிவி அம்பயரிடமிருந்து தீர்ப்பு வந்தது.

இந்தூர் பிட்ச்சுக்கு 3 டீமெரிட் புள்ளி..! Gabba பிட்ச்சுக்கு மட்டும் ஏன் கொடுக்கல..? ICC-யை அலறவிட்ட கவாஸ்கர்

Latest Videos

click me!