
மேஷம்:
தேங்கிக்கிடந்த நீண்டகால வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். ஏதாவது ஒரு பொருள் திருடு போகக்கூடும். தொழிலில் இருந்துவந்த பிரச்னைகளும் முடிவுக்கு வந்து, தொழிலும் வெற்றிகரமாக அமையும்.
ரிஷபம்:
இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள். வீட்டுச்செலவு அதிகரிக்கும். அதனால் பட்ஜெட்டில் கவனமாக இருக்கவும். ஈகோவை தவிர்க்கவும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
மிதுனம்:
மரியாதையை நீங்கள் கொடுத்தால் தான் பெறமுடியும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான பொறுப்பு கிடைக்கும். லோன் விஷயங்களில் புத்திசாலித்தனமாக நடக்கவும். தொழிலில் வேலை செய்யும் முறையை மாற்றியமைக்க முயற்சி செய்யவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வயிற்றில் சிறிய தொல்லை ஏற்படலாம்.
கடகம்:
கடந்த சில தினங்களாக நீங்கள் கடுமையாக உழைத்ததற்கான பலன், நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இன்று கிடைக்கும். எதையும் செய்யும் முன் பல முறை ஆழமாக யோசிக்கவும். வீடு, கார் தொடர்பான ஆவணங்களில் கவனம் தேவை. தொழில் விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சிம்மம்:
குடும்பம் மற்றும் பொருளாதார விஷயங்களில் ஆதாயம் தரும் நல்ல முடிவு எடுப்பீர்கள். வேலை தேடும் இளைஞர்கள் நேர்காணலில் அசத்துவார்கள். பண விஷயத்தில் கவலை இருக்கும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். வெளி வேலையில் மூக்கை நுழைத்தால் மன அமைதி கெடும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு மரியாதை இருக்கும்.
கன்னி:
ஆன்மீக ஈடுபாடு உங்கள் செயல்பாடுகளை மேலும் நேர்மறையாக்கும். மீடியா மற்றும் மார்க்கெட்டிங் அறிவை வளர்த்துக்கொள்ளவும். முதலீடு விஷயங்களில் கவனம் தேவை. தெரியாதவர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். கருத்து வேறுபாடுகள் உறவை பாதிக்கும். தொழில் ரீதியான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
துலாம்:
யோகா மற்றும் தியானத்தை உங்கள் தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள். புதிய வேலையை தொடங்கும் முன் அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யவும். உங்கள் முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். குழந்தைகளுடன் அமர்ந்து பேசி அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும். ஸ்பெஷலான ஒரு நபருடனான சந்திப்பும் அவரது அறிவுரையும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
விருச்சிகம்:
வருமானத்திற்கான புதிய வழி உருவாகும். நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வரும். வேலையில் கவனம் தேவை. அலட்சியமாக இருப்பது பிரச்னையை தரும். பணிச்சுமையால் தனிப்பட்ட வேலையில் கவனம் செலுத்த முடியாது.
தனுசு:
உடல் ஆரோக்கியத்தில் இருந்த நீண்டகால பிரச்னை முடிவுக்கு வரும். மூத்தவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. விரும்பத்தகாத செய்தி பயத்தையும் பதற்றத்தையும் தரும். தியானம் செய்வது மன அமைதியை தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். எனவே அனைத்து வேலைகளையும் முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளவும். சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். யாரிடமிருந்தும் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். ஏனெனில் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்:
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு இன்று பலன் கிடைக்கும். திடீரென அதிக செலவு செய்ய வேண்டி வரும். அதை உங்களால் தவிர்க்கவே முடியாது.
மீனம்:
இன்றைய தினம் ஒரு சந்திப்பு உங்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். சொத்து விஷயங்களில் பண பரிமாற்றம் செய்ய வேண்டாம். நீங்கள் செய்யும் தவறு உறவில் விரிசலை ஏற்படுத்தும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும்.