டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க 4 பேரும் கண்டிப்பா இருந்திருக்கணும்..!

First Published | Sep 30, 2022, 3:36 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற்றிருந்திருக்க வேண்டிய 4 வீரர்கள் யார் யார் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு உலக கோப்பைக்காக தயாராகிவருகிறது. 
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு
 

Tap to resize

டி20 உலக கோப்பைக்கான இந்திய மெயின் அணியில் ஷமியை தேர்வு செய்யாமல் ஸ்டாண்ட் பை வீரராக மட்டுமே எடுத்தது, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்காதது ஆகியவை விமர்சனத்துக்குள்ளானது.
 

டி20 உலக கோப்பையில் ஜடேஜா காயத்தால் ஆடாத நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ராவும் காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

இதையும் படிங்க - காயத்தால் விலகிய பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் அதிருப்தி
 

இந்நிலையில், இந்திய அணி தேர்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார், 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கை கண்டிப்பாக எடுத்திருக்கவேண்டும். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசும்போதே அவரை எடுக்காமல், 130 கிமீ லெவலுக்கு அவரது வேகம் குறைந்தபின் எடுப்பதில் ஒரு பயனும் இல்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரையும் எடுக்கவில்லை. முகமது ஷமி மற்றும் ஷுப்மன் கில்லையும் எடுத்திருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்க்கார் கருத்து கூறியுள்ளார்.
 

Latest Videos

click me!