டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் அவதிப்பட்டுவருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகினார்.