டி20 உலக கோப்பையிலிருந்து விலகும் பும்ரா..? இந்தியாவிற்கு மரண அடி.. மாற்று வீரர் அவரா..?

First Published Sep 29, 2022, 4:37 PM IST

டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடுவது சந்தேகமாகியுள்ளது. பும்ரா ஆடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவும் பாதிப்பாகவும் அமையும்.
 

டி20 உலக கோப்பை அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை  ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா ஆடுவது சந்தேகமாகியுள்ளது. ஜஸ்ப்ரித் பும்ராவைத்தான் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் அதிகமாக சார்ந்திருக்கிறது. பும்ரா தான் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். அவர் காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாததால் தான், டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கி ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்றது.

இதையும் படிங்க - டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ரீசாந்த் உருப்படியான அட்வைஸ்
 

ஆனால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடிய பும்ரா, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அவரது முதுகு பிரச்னை காரணமாக மீண்டும் காயத்தால் அவதிப்படுகிறார். அதனால் தான் தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடவில்லை. தென்னாப்பிரிக்க தொடரில் அவர் ஆடமாட்டார் என்றும், டி20 உலக கோப்பையில் ஆடுவதும் சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நன்றாக பவுன்ஸ் ஆகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பும்ரா கடும் தாக்கத்தை ஏற்படுத்துவார். டி20 உலக கோப்பையில் பவுலிங்கை பொறுத்தமட்டில் பும்ராவைத்தான் இந்திய அணி நம்பியிருந்தது. ஏற்கனவே புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அதிக ரன்களை வாரி வழங்கிவரும் நிலையில், பும்ராவை நம்பித்தான் இந்திய அணி இருந்தது. இந்நிலையில், அவர் ஆடவில்லை என்றால் அது டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். கேப்டன் ரோஹித் ஒரு கையை இழந்ததுபோல் உணர்வார். பும்ரா இல்லாமல்தான் அணியின் பேலன்ஸ் வலுவிழந்து ஆசிய கோப்பையில் இந்திய அணி தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் மற்றும் முகமது ரிஸ்வானின் தரமான சாதனைகளை தகர்த்தெறிந்த சூர்யகுமார் யாதவ்
 

ஒருவேளை டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடமுடியாமல் போனால், அவருக்கு மாற்றுவீரராக முகமது சிராஜ் எடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!