டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ரீசாந்த் உருப்படியான அட்வைஸ்

டெத் ஓவர்களில் அதிகமான ரன்களை புவனேஷ்வர் குமார் வழங்கிவருவது கவலையளிக்கும் நிலையில், அவருக்கு முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்த வேளையில், இந்திய அணியின் முன்னணி மற்றும் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் அதிகமான ரன்களை வழங்குவது இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.
 

bhuviஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இலக்கை விரட்டியபோது 19வது ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் முறையே 19 மற்றும் 14 ரன்களை வழங்கினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 19வது ஓவரில் 21 ரன்களை வழங்கினார்.  டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்குவது இந்திய அணிக்கு பெரும் கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி..! கடைசி நேரத்தில் அதிரடி மாற்றம்


இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீசாந்த்,  நல்ல  பந்துகளை வீசினாலும் டி20 கிரிக்கெட்டில் 60-70% அடி வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அப்படி நடக்காது. பவுலிங்கை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமாருக்கு அணி நிர்வாகத்திடமிருந்து ஆதரவு தேவை. அவரது அனுபவம் மற்றும் ஸ்விங் செய்யும் திறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நல்ல வேரியேஷனில் ஸ்விங் செய்து வீசினால் கண்டிப்பாக அவர் ஜொலிப்பார்.

இதையும் படிங்க - அந்த ஒரு விஷயத்துல எவ்வளவு முக்குனாலும் அக்ஸர் படேலால் ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது! முன்னாள் வீரர் கருத்து

ரன்களை வழங்கும்போது பலரும் பலவிதமாக பேசுவார்கள். பலவிதமான அறிவுரைகளை வழங்குவார்கள். அவற்றிற்கெல்லாம் செவிமடுத்து, தனது திறமையை சந்தேகிக்கவோ, தனது பலத்தை மாற்றிக்கொள்ளவோ முயற்சிக்கக்கூடாது. அந்த தவறை நான் செய்திருக்கிறேன். எனவே அந்த தவறை புவனேஷ்வர் குமார் செய்யக்கூடாது என நினைக்கிறேன். தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து புவனேஷ்வர் குமார் செயல்பட வேண்டும் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

Latest Videos

click me!