டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி..! கடைசி நேரத்தில் அதிரடி மாற்றம்

First Published | Sep 27, 2022, 3:52 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் மற்றும் 4 ஸ்டாண்ட்பை வீரர்கள் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - PAK vs ENG: கடைசி 2 டி20 போட்டிகளில் அணியில் இணையும் அதிரடி வீரர்.. அசுர பலம் பெறும் இங்கிலாந்து
 

Tap to resize

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் ஃபாஸ்ட் ப்வுலர் முகமது ஷமி எடுக்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. முகமது ஷமியை கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து கூறியிருந்தனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹர்ஷல் படேலின் பவுலிங் எடுபடவில்லை. அதிக ரன்களை வாரி வழங்கினார். புவனேஷ்வர் குமாரும் ரன்களை அதிகமாக வழங்குவது கவலையளிக்கும் நிலையில், முகமது ஷமி இல்லாதது பாதிப்பாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ஷமி இடம்பெற்றிருந்தும் கொரோனா காரணமாக இந்த 2 தொடர்களிலும் அவர் ஆடவில்லை.

டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷமி சேர்க்கப்படவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்த நிலையில், அதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அணியில் மாற்றங்கள் செய்வதென்றால் அக்டோபர் 9 வரை செய்யலாம் என ஐசிசி கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே இந்திய அணி ஷமியை சேர்க்க விரும்பினால் அதற்கான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க - அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி
 

அதேபோல டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாத கேமரூன் க்ரீன் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக ஆடிய நிலையில், அவரை ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பைக்கான அணியில் சேர்க்கவும் வாய்ப்புள்ளது.
 

Latest Videos

click me!