இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் தொடர் 2-2 என சமனில் உள்ளது. 5வது டி20 போட்டி நாளை(செப்டம்பர் 28) நடக்கிறது.
24
இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஆடவில்லை. காயத்திலிருந்து மீண்ட அவரை உடனடியாக ஆடவைத்து ரிஸ்க் எடுக்கமுடியாது என்பதால் முதல் 4 டி20 போட்டிகளில் பட்லர் ஆடவில்லை. அதனால் மொயின் அலி தான் கேப்டன்சி செய்தார்.
கடைசி 2 போட்டிகளில் ஜோஸ் பட்லர் ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி பேட்ஸ்மேனும் கேப்டனுமான ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து அணியின் பேலன்ஸ் வலுவடையும். தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டிகளில் பட்லர் ஆடுவது இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்க்கும்.