டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து, இனி வேறு அணி முறியடிக்க முடியாத சாதனையை படைத்த இந்தியா

First Published Sep 26, 2022, 3:35 PM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
 

டி20 உலக கோப்பைக்காக தயாராகிவரும் இந்திய அணி, ஆசிய கோப்பையில் தோல்வியடைந்திருந்தாலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. 
 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அதன் முழு பலத்துடனும், கிட்டத்தட்ட டி20 உலக கோப்பைக்கான வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடனும் களமிறங்கியது. அதன்விளைவாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. 

இதையும் படிங்க - PAK vs ENG: பரபரப்பான 4வது டி20யில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி..! 19வது ஓவரில் ஆட்டத்தை திருப்பிய ஹாரிஸ் ராஃப்

நேற்று ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்களை குவிக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் அரைசதங்களால் கடைசி ஓவரில் இலக்கை அடித்து இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 போட்டியில் பெற்ற வெற்றி, 2022ம் ஆண்டில் இந்திய அணியின் 21வது வெற்றி ஆகும். இந்த ஆண்டில் ஆடிய 28 போட்டிகளில் 21 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

2021ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 20 வெற்றிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஓராண்டு கூட நீடிக்கவிடாமல் முறியடித்துள்ளது இந்திய அணி.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி
 

இந்திய அணி இந்த ஆண்டில் இன்னும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் ஆடவிருப்பதால், 21 என்ற வெற்றி எண்ணிக்கை இன்னும் உயரும். இந்த சாதனையை இன்னொரு அணி இனிமேல் முறியடிப்பது கடினமாகும்.

click me!