இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

First Published Sep 25, 2022, 2:51 PM IST

ஒரு உற்சாகமான செய்தியை இன்று தெரிவிக்கவுள்ளதாக கூறி தோனி நேற்று பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஓரியோவை அறிமுகம் செய்துவைத்தார்.
 

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்.  டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 2020ம் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக 4 முறை கோப்பையை வென்று கொடுத்து ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணி திகழ முக்கிய காரணமாக திகழும் தோனி, தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை மண்ணில் ரசிகர்கள் மத்தியில் ஆடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இதையும் படிங்க - IND vs AUS: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்.! உத்தேச ஆடும் லெவன்

அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் ஹோம் & அவே என்ற பழைய ஃபார்மட்டில் ஆடவுள்ளது. எனவே அடுத்த சீசன் போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதால், அடுத்த சீசனுடன் தோனி ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனில் தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். எனவே அடுத்த ஐபிஎல் சீசன் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தோனி ஒரு சிறந்த கேப்டன் மட்டுமல்லாது சிறந்த மார்கெட்டிங் திறன் நிறைந்தவரும் கூட. கடந்த காலங்களில் அதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். இப்போது அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நாளை(செப்டம்பர் 25) ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்கிறேன் என்று தோனி இட்ட ஃபேஸ்புக் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தோனி என்ன சொல்லப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

இந்நிலையில், இன்று ஓரியோ பிஸ்கட்டை லான்ச் செய்தார். இதுதான் அவர் சொன்ன உற்சாகமான செய்தியா..?  தன் மீதான அன்பாலும் பற்றாலும் தன்னை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்யும் கோடிக்கணக்கான ரசிகர்களை பணத்திற்காக மிஸ் யூஸ் செய்வதை தவிர வேறு என்னவாக இதை புரிந்துகொள்ள முடியும்..? தனது ஃபாலோயர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோனி இட்ட பதிவிற்கு ஸ்பெஷலாக கவனிக்கப்பட்டிருப்பார்.
 

click me!