இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
24
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நாளை செப்டம்பர் 25ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி தான் தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.
இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படும். ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படுவார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய புவனேஷ்வர் குமாருக்கு ஹைதராபாத் ஆடுகளம் அத்துபடி. எனவே புவனேஷ்வர் குமார் கடைசி போட்டியில் ஆடுவார்.