T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

First Published | Sep 24, 2022, 4:20 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக, ரிஷப் பண்ட்  - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை எடுப்பது என்பது குறித்த விவாதம் நடந்துவரும் நிலையில், சுனில் கவாஸ்கர் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரும் முரண்பட்ட கருத்துகளை கூறியுள்ளனர்.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யாரை ஆடவைப்பது என்பதை இந்திய அணி நிர்வாகமே இன்னும் முடிவு செய்யவில்லை. அதனால் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை டி20 உலக கோப்பைக்கான ஆடும் லெவனில் எடுக்கலாம் என்பது பெரும் விவாதமாக நடந்துவருகிறது.

இந்திய அணியின் எதிர்காலம், பவர் ஹிட்டர் மற்றும் மேட்ச் வின்னர் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ரிஷப் பண்ட்டைத்தான் ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் சிலர் கருத்து கூறுகின்றனர். ஆடம் கில்கிறிஸ்ட் ரிஷப் பண்ட்டைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க- அந்த விஷயத்துல மத்தவன்லாம் வெத்து.. நான் தான்டா கெத்து..! சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை
 

Tap to resize

அதேவேளையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து முடித்து கொடுத்ததுவரை, தன்னை ஒரு ஃபினிஷராக அண்மைக்காலத்தில் வலுவாக நிலைநிறுத்திக்கொண்ட தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக சிலர் கருத்து கூறுகின்றனர்.
 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட்  மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆடலாம். 5ம் வரிசையில் பாண்டியா, 6ம் வரிசையில் ரிஷப் பண்ட், 7ம் வரிசையில் தினேஷ் கார்த்திக் ஆடலாம் என்றார் கவாஸ்கர். (ஆனால் இப்படி ஆடினால் ஹர்திக் பாண்டியா 5வது பவுலராக ஆட நேரிடும். கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாமல் ஆடுவது அணிக்கு பின்னடைவாக அமையும்.)

இதையும் படிங்க - IND vs AUS: ரிஷப் பண்ட்டுக்கு முன் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது ஏன்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

கவாஸ்கரின் கருத்துடன் முரண்பட்ட மேத்யூ ஹைடன், இருவரும் ஆடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தினேஷ் கார்த்திக் நல்ல பிளேயர் தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆட ரிஷப் பண்ட்டே சரியான வீரர். தினேஷ் கார்த்தின் பந்தின் வேகத்தையும், பிட்ச்சின் தன்மையையும் பயன்படுத்தி ஆடவல்லவீரர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களோ பெரியவை. எனவே அங்கு ஆட பவர் ஹிட்டர் தான் தேவை. எனவே ரிஷப் பண்ட் தான் என்னுடைய சாய்ஸ் என்று ஹைடன் தெரிவித்தார். - - 

Latest Videos

click me!