இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர். அதனால் ஹிட்மேன் என்ற பெயரையும் பெற்றார். மற்ற வீரர்கள் எல்லாம் சிக்ஸர்களை கஷ்டப்பட்டு பவர் கொடுத்து அடிக்க, அசாதாரணமாக சிக்ஸர் அடிப்பார் ரோஹித். அவர் சிக்ஸர் அடிப்பதை பார்க்கும்போது, சிக்ஸர் அடிப்பது எளிதுபோல் தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அதை எளிதாக காட்டுவார் ரோஹித்.