சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளின் விளைவாக சீசனின் இடையே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ஜடேஜாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீசனில் அதன்பின்னர் அவர் ஆடவில்லை.