பவர்ப்ளேயில் புதிய பந்தில் அருமையாக ஸ்விங் செய்து வீசக்கூடிய புவனேஷ்வர் குமார், பொதுவாகவே அவ்வளவு சிறந்த டெத் பவுலர் கிடையாது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் 19வது ஓவரில் 19 ரன்களையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் 14 ரன்களையும் வாரி வழங்கிய நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியின் 19வது ஓவரில் 16 ரன்களை வழங்கினார். டெத் ஓவர்களில் சீனியர் பவுலரான புவனேஷ்வர் குமார் அதிக ரன்களை வழங்கிவருவது கவலையான விஷயம்.