ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
25
2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும்.
கடந்த போட்டியில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் உமேஷ் யாதவுக்கு பதிலாக இந்த போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடுவார்.
45
கடந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அதிக ரன்களை வாரி வழங்கினாலும், அவர்கள் டி20 உலக கோப்பையில் ஆடவுள்ள இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் என்பதால் அவர்கள் அணியில் தொடர்ந்து ஆடுவார்கள்.