இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, இந்திய அணி 2-3 தோல்விகளை அடைந்திருக்கிறது. ஆனால் இந்திய அணியின் கிராஃப் நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டன். அவர் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரது வெற்றி விகிதம் 82 சதவிகிதம் ஆகும். அவர் கேப்டன்சி செய்துள்ள 35 போட்டிகளில் 4 தோல்விகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே அணி மீது அதிக அக்கறை கொண்டவர்கள். கண்டிப்பாக நாக்பூர் டி20யில் கம்பேக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். 2-3 தோல்விகளால் அணி மீதான எனது மதிப்பீடு குறையாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.