பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

First Published Sep 22, 2022, 3:39 PM IST

ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் தான் என்றாலும், பென் ஸ்டோக்ஸுடன் அவரை ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர் மட்டுமல்லாது மேட்ச் வின்னரும் கூட. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான பவுலிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர். 
 

காயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்த ஹர்திக் பாண்டியா, முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் அசத்தி அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இதையும் படிங்க - IPL: மீண்டும் பழைய முறைக்கு திரும்பும் ஐபிஎல்..! கன்ஃபாம் பண்ண கங்குலி.. உற்சாகத்தில் ஐபிஎல் அணிகள்

அதன்விளைவாக, மீண்டும் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்கான இடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். அவரது கெரியரில் சிறந்த ஃபார்மில் இப்போது உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து மிரட்டினார். 

இந்நிலையில், சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிடப்படுவதுடன் இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப், ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் இருதரப்பு தொடர்களில் மட்டும்தான் அவர் சிறப்பாக ஆடுகிறார். ஆசிய கோப்பையில் அவர் பெரியளவில் சிறப்பாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நன்றாகத்தான் ஆடினார். 

இதையும் படிங்க - அவர்தான் உங்க எதிர்காலம்.. இந்திய அணியின் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஈசியா தீர்வு சொன்ன மேத்யூ ஹைடன்

ஆனால் ஹர்திக் பாண்டியாவை பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிட முடியாது. அவர் உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். எனவே பென் ஸ்டோக்ஸுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடவே முடியாது. கோப்பை கோப்பை தான். ஸ்டோக்ஸ் பெரிய தொடர்களில் சிறப்பாக ஆடி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். எனவே ஹர்திக் பாண்டியாவை விட கண்டிப்பாக ஸ்டோக்ஸ்தான் சிறந்த ஆல்ரவுண்டர் என்று ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
 

click me!