இந்திய அணி இவரை ஏன் டீம்ல வச்சுருக்காங்கனே தெரியல - மேத்யூ ஹைடன்

First Published Sep 22, 2022, 4:25 PM IST

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் தெளிவாக இல்லை என்றும், அவர் இன்னும் மேலே இறக்கிவிடப்படவேண்டும் என்றும் மேத்யூ ஹைடன் தெரிவித்தார்.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.
 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங்  ஆடி தன்னை ஒரு ஃபினிஷராக அடையாளம் காட்டிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார்.

இதையும் படிங்க - IPL: மீண்டும் பழைய முறைக்கு திரும்பும் ஐபிஎல்..! கன்ஃபாம் பண்ண கங்குலி.. உற்சாகத்தில் ஐபிஎல் அணிகள்
 

ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே இறக்கிவிடப்படுகிறார். 10-12 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடுகிறார். அதைத்தான் அவரும் விரும்புகிறார். தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை விக்கெட் கீப்பராக ஆடவைப்பது என்று இந்திய அணி நிர்வாகம் இன்னும் திடமான முடிவெடுக்கவில்லை. 
 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட தினேஷ் கார்த்திக் தான் ஆடினார். ஆனால் 5 பந்தில் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்பதால் அவரைத்தான் இந்திய அணி ஆடவைக்க வேண்டும் என்று கருத்து கூறியிருந்த மேத்யூ ஹைடன், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க - பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய மேத்யூ ஹைடன், தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன என்பதை நான் யோசிக்கிறேன். தினேஷ் கார்த்திக்கை பற்றி நான் மதிப்பில்லாமல் பேசவில்லை. ஆனால் அவர் இன்னும் அதிகமாக பேட்டிங் ஆடவேண்டும். அவர் சிறந்த பிளேயர். அவர் டெத் ஓவர்களில் ஆடும் அருமையான ஷாட்டுகளை முன்கூட்டியே இறங்கியும் ஆடமுடியும். எனவே அவரை இன்னும் மேலே இறக்கிவிட வேண்டும் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்தார்.
 

click me!