ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யார் இந்திய அணியில் ஆடணும்? கில்கிறிஸ்ட்டே சொல்லிட்டார்.. கேளுப்பா ரோஹித்

இந்திய அணியில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடியே தீரவேண்டும் என்று ஆஸி., முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார்.
 

adam gilchrist opines rishabh pant should be in team india playing eleven

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.

adam gilchrist opines rishabh pant should be in team india playing eleven

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங்  ஆடி தன்னை ஒரு ஃபினிஷராக அடையாளம் காட்டிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார்.

இதையும் படிங்க - IND vs AUS: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
 


ஆனால் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். அதற்கு  முன் அவரை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசி 5 ஓவர்களில் அல்லது 10-15 பந்துகள் ஆடுவதற்காக ஒரு வீரரை எடுக்கக்கூடாது. ஆட்டத்தை இக்கட்டான நிலையிலிருந்து கடைசிவரை எடுத்துச்சென்று முடித்து கொடுப்பவர் தான் ஃபினிஷர் தானே, கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட் ஆடி ஃபினிஷிங் டச் கொடுப்பவர் ஃபினிஷர் அல்ல என்ற விமர்சனம் எழுந்தது.
 

ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக சில முன்னாள் வீரர்களும், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்தனர். டி20 உலக கோப்பையை கருத்தில்கொண்டு இருவரில் ஒருவரை இந்திய அணி ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இருவரையும் மாற்றி மாற்றி இறக்கிவிட்டு, ஒரு தெளிவில்லாத சூழலை உருவாக்கி, அவர்கள் இருவருக்கும் குழப்பதை  ஏற்படுத்தி அணி நிர்வாகமும் குழப்பமடைகிறது.
 

ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டிவிட்டு ரிஷப் பண்ட்டை ஆடவைத்தது. இடையில் சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், கடைசி 5 இன்னிங்ஸ்களில் சொதப்பியுள்ளார். ரிஷப் பண்ட்டும் நம்பிக்கையுடன் ஆடாமல் சொதப்பிவருகிறார்.
 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பராக ஆடினார். ஆனால் அவர் 5 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையும் படிங்க - r

டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை ஆடவைப்பது என்று இன்னும் இந்திய அணி ஒரு திடமான முடிவெடுக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆஸி., முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட்,  ரிஷப் பண்ட் துணிச்சலான வீரர். உலகின் எப்பேர்ப்பட்ட பவுலிங் யூனிட்டையும் அடித்து துவம்சம் செய்யவல்லவர். இந்திய அணியின் பேட்டிங் லைனில் அவர் கண்டிப்பாக இருக்கவேண்டும். தினேஷ் கார்த்திக் வேண்டுமென்றால் அவரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடவேண்டும் என்று கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார்.
 

Latest Videos

click me!