IND vs AUS: ரிஷப் பண்ட்டுக்கு முன் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது ஏன்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

First Published Sep 24, 2022, 3:28 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியை தினேஷ் கார்த்திக் வெற்றிகரமாக முடித்து கொடுத்த நிலையில், அந்த போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு முன் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது ஏன் என கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் இறங்கப்போகிறார் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாத விஷயமாக உள்ளது.

தினேஷ் கார்த்திக்கிற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக பார்க்கப்பட்டாலும், இதுதொடர்பான விவாதம் நடந்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் (8வது ஓவரில்) இந்தியாவின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, டேனியல் சாம்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்து மீண்டும் தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார் தினேஷ் கார்த்திக்.

இதையும் படிங்க - செம பவுலிங்.. அவுட்டாக்குன பும்ராவை கைதட்டி பாராட்டிய ஆரோன் ஃபின்ச்..! வைரல் வீடியோ

இந்நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு முன் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது ஏன் என்று கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க - பல வருஷமா இருக்கும் அந்த பலவீனத்தை சரி செய்யலைனா இந்திய அணி டி20 உலக கோப்பையை ஜெயிக்க முடியாது - கவாஸ்கர்
 

இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் முடித்து கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரிஷப் பண்ட்டை இறக்கலாமா என்றுதான் யோசித்தோம். ஆனால் டேனியல் சாம்ஸ் ஆஃப் கட்டர்களை வீசுவார். எனவே தினேஷ் கார்த்திக்கை இறக்கலாம் என்று தீர்மானித்து அவரை இறக்கினோம். அவர் வழக்கம்போல அந்த ரோலை செவ்வனே செய்தார் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

click me!